பிப்ரவரி 7ஆம் நாள் நண்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் அம்மையார் ஹெய்லாங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரில் விருந்து ஒன்றை நடத்தி, 9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்ற மரியாதைக்குரிய சர்வதேச விருந்தினர்களை வரவேற்கின்றனர்.
இதில் ஷிச்சின்பிங் கூறுகையில், இந்த ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி, அமைதி, வளர்ச்சி மற்றும் நட்பின் மீதான ஆசிய மக்களின் கூட்டு விருப்பங்களையும் இலக்கையும் பிரதிபலிக்கின்றது.
ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சில் மற்றும் பல்வேறு நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் பிரதிநிதிகளின் கூட்டு முயற்சியில், ஹார்பின் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த விளையாட்டுப் போட்டி ஒன்றை உலகிற்கு வழங்கும் என்று ஷிச்சின்பிங் நம்பிக்கை தெரிவித்தார்.