23வது சீனா-ஆசியான் கண்காட்சி நிறைவு

Estimated read time 1 min read

23வது சீனா-ஆசியான் கண்காட்சியும், சீனா-ஆசியான் வணிக மற்றும் முதலீட்டு உச்சிமாநாடும் 21ஆம் நாள் நிறைவடைந்தன. நடப்பு கண்காட்சியில், சீனா-ஆசியான் ஏஐ தொழில்துறைகளை இணைப்பதற்கான தளம் உருவாக்கப்பட்டு, ஆசியானின் ஏஐ தொழில்நுட்பப் பயன்பாட்டு சூழ்நிலைக்கான 42 ஒத்துழைப்பு தேவைகள் வெளியிடப்பட்டன. மேலும், இக்கண்காட்சியில் எட்டப்பட்ட சுமார் 100 ஒத்துழைப்பு விருப்பங்களில், ஆசியான் நாடுகளுடனான ஒத்துழைப்பு ஒப்பந்தங்களின் மதிப்பு 100 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

24வது சீனா-ஆசியான் கண்காட்சி 2027ஆம் ஆண்டின் செப்டம்பர் 17 முதல் 21ஆம் நாள் வரை நடைபெறும் என்றும், சிங்கப்பூர் கருப்பொருள் நாடாகத் திகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author