80 ஆண்டுகளுக்கு முந்தைய அக்டோபர் 25ஆம் நாள், தைபெய் நகரில், ஜப்பான் சரணடைந்ததை சீன அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. சுமார் அரை நூற்றாண்டு காலத்தில், ஜப்பானால் கைப்பற்றப்பட்ட தைவான், தாய்நாட்டின் அரவணைப்புக்கு இணையும் என்பதை இது வெளிகாட்டியுள்ளது.
80 ஆண்டுகளுக்குப் பிந்தைய இதே நாளில், சீனப் பெருநிலப் பகுதியில், தைவான் மீட்டெடுக்கப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவு மாநாடு நடைபெற்று, தைவான் உடன்பிறப்புகளுடன் இந்நிகழ்வின் வரலாற்று நினைவு முக்கியத்துவத்தைக் கூட்டாக நினைவுக் கூருகின்றது.
சீன தேசிய மக்கள் பேரவையின் 14ஆவது நிரந்தரக் கமிட்டியின் 18ஆவது கூட்டத்தில் தைவான் மீட்டெடுக்கப்பட்டதன் நினைவு நாள் பற்றிய தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது. அக்டோபர் 25ஆம் நாள் தைவான் மீட்டெடுக்கப்பட்டதன் நினைவு தினமாகும் என்று சட்டரீதியாக நிர்மணயிக்கப்பட்டது. தைவான் மாநிலத்தின் பொது கருத்துக்கள் மற்றும் சர்வதேச சமூகம் இதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. பெய்ஜிங் மாநகருக்கு வருகை தந்த தைவான் தொழிலாளர் கட்சியின் தலைவர் வூரோயூன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது கூறுகையில்,
இரு கரைகள் ஒன்றிணையுப்பது உறுதி. யுகத்தின் ஓட்டம் மற்றும் வரலாற்றில் தவிர்க்க முடியாத போக்கு இதுவாகும் என்றார்.
