CBSE வழி 10-ஆம் வகுப்பு, மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (பிப்ரவரி 15) தொடங்குகிறது.
இந்த பொதுத்தேர்வை 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர்.
இந்த நிலையில் தேர்வுக்கான நெறிமுறைகளை நேற்று சி.பி.எஸ்.இ. மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கு முன்பே வர வேண்டும்.
தேர்வு நேரம், காலை 10.30 மணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், காலை 10 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகை தரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்கள்.
அதன் பிறகு எந்த மாணவர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.