பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் மார்கோஸ் அண்மையில், 21ஆவது ஷாங்க்ரிலா உரையாடலில் உரை நிகழ்த்திய போது கூறுகையில்,
ஐ.நா பேரவையின் கடல் சட்டம் மற்றும் கூறப்படும் தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பு, பிலிப்பைன்ஸின் சட்டப்பூர்வமான உரிமைகளை ஏற்றுக்கொண்டு, தென் சீனக் கடல் குறித்து அந்நாட்டின் கொள்கையின் அடித்தளமாகும் என்றார் அவர்.
பிலிப்பைன்ஸின் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் குறித்து சீனா கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாடுகள் நலன்களை தெளிவாக கருத்தில் கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறைக்குத் திரும்ப வேண்டும் என்று சீனா உறுதியாக தெரிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஆசியா-பசிபிக் சமநிலைப்படுத்தல் எனும் நெடுநோக்கு பின்னணியில், பிலிப்பைன்ஸ் தானாக முன்வந்து ஒரு சார்பாக தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பை வழங்கி சட்டத்தைச் சாக்குபோக்காக கொண்டு, அரசியல் தந்திரத்தைக் கேலிகூத்தாக்கி வருகிறது.
அமெரிக்கா கற்பனையான பாதுகாப்பு வாக்குறுதியையும் அதிகமான பழைய ஆயுதங்களையும் வழங்கியது மற்றும் அமெரிக்கா பிலிப்பைன்ஸில் ஊடுருவியதால், பிரதேச விவகாரத்தைக் கையாளும் போது, அமெரிக்காவின் உதவியாளர் நாடாக பிலிப்பைன்ஸ் திகழ விரும்புகிறது.