ஷிச்சின்பிங்கின் அமெரிக்க அரசு முறைப் பயணம்

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பின் அழைப்பை ஏற்று, அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் பொருட்டு உள்ளூர் நேரபடி 23ம் நாள் மாலை சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனைச் சென்றடைந்தார்.

டிரம்பும் அவரின் மனைவி மெலானியா அம்மையாரும் ஆண்ட்ரூஸ் விமானப் படைத்தளத்தில் ஷிச்சின்பிங்கையும் அவரின் மனைவியான பெங்லியுவான் அம்மையாரையும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இந்த வரவேற்பின் போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஒரு மகத்தான தலைவர் என்று டிரம்ப் புகழாரம் சூட்டினார். அதோடு, இது ஒரு அற்புதமான தருணமாகும் எனக் குறிப்பிட்ட அவர், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் இணைந்து, ஆழமாகக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு, இரு நாட்டுறவின் வளர்ச்சியை விரைவுபடுத்த விரும்புவதாகவும்  தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் விமான நிலையத்தில் நிகழ்த்திய உரையில், சீன மக்களின் சார்பில், அமெரிக்க மக்களுக்கு இனிமையான வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்தார். மேலும், சீனாவும் அமெரிக்காவும் மகத்தான நாடுகளாகும் எனக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளின் மக்கள் மகத்தானவர்கள் என்றும், இரு நாட்டு மக்களும் நீண்டகாலமாக நட்புடன் தொடர்புகொண்டு வருகின்றனர் என்றும் கூறினார். அதோடு, இரு தரப்புகளின் நலன்கள் மிகவும் ஆழமாக ஒருங்கிணைந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய ஷிச்சின்பிங், இரு நாடுகள் கூட்டாளிகளாக இருக்க வேண்டும். இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று போட்டியிடும் நாடுகள் அல்ல என்றும் கூறினார். ஒன்றுக்கு ஒன்று சாதனைகளைப் படைத்து, உலகத்திற்கு நன்மை பயக்க பாடுபட வேண்டும். சீனாவும் அமெரிக்காவும் ஒத்த இலக்குகளின்படி, ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சர்ச்சையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். குறிப்பாக டிரம்புடன் இணைந்து, இரு நாட்டுறவு, உலகின் நிலைமை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆழமான பரிமாற்றத்தை மேற்கொள்வதை எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்ததோடு, இரு தரப்புகளுக்கிடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வாய்ப்புக்களை விரிவாக்க வேண்டும். இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன் இப்பயணம் அதிகமான சாதனைகளைப் பெற்று, இரு நாட்டு மக்களுக்கும் நன்மை அளித்து, உலகின் அமைதிக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

You May Also Like

More From Author