2026ம் ஆண்டின் சிங்கப்பூர் விமானக் கண்காட்சி பிப்ரவரி 3ம் நாள் துவங்கியது. சீனா தயாரித்த வணிக விமானம் சி919 மற்றும் சி909 இதில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
சி919 விமானத்தில் 158 முதல் 192 வரை இருக்கைகள் உள்ளன. இவ்விமானம், 4075 முதல் 5555 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். சி909 விமானத்தில் 78 முதல் 97 வரை இருக்கைகள் உள்ளன. இவ்விமானம் 2225 முதல் 3700 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
தற்போது இவ்விரு வகைகளைச் சேர்ந்த சுமார் 200 விமானங்கள், விநியோகிக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 800 விமான நெறிகளில் 3.6 கோடிக்கும் மேலான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
படம்:VCG
