சீனாவின் ஹாங்சோ நகரில் 24ஆம் நாள் நடைபெற்ற 5ஆவது உலகளாவிய எண்ணியல் வர்த்தக கண்காட்சி துவக்க விழாவில் சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், எண்ணியல் வர்த்தக கண்காட்சி, உலகளாவில் எண்ணியல் பொருளாதார ஒத்துழைப்புகளை ஊக்குவிப்பதற்கான முக்கிய மேடையாக மாறியுள்ளது. எண்ணியல் யுகத்தில் உலகளாவிய வர்த்தகத்தின் சிறந்த வளர்ச்சியை திறந்த கண்ணோட்டத்தில் விரைவுபடுத்த வேண்டும். நடைமுறையான நடவடிக்கைகளின் மூலம், உலகளாவிய எண்ணியல் வர்த்தகத்திற்கு சீனா முக்கிய பங்காற்றும் என்றார்.
மலேசிய தலைமையமைச்சர், கிர்கிஸ்தான் தலைமையமைச்சர் உள்ளிட்டோரும் இத்துவக்க விழாவில் பங்கெடுத்து உரைநிகழ்த்தினர். சுமார் 50 நாடுகள் மற்றும் பிரதேசங்கள், தொடர்புடைய சர்வதேச அமைப்புகள் உள்ளிட்டவற்றின் ஏறக்குறைய 1200 பிரதிநிதிகளும் இத்துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.
