உலகின் மிகப் பெரிய தொழில் துறை ரோபோ சந்தையாக உருவெடுத்துள்ள சீனா

சர்வதேச ரோபோட்டிக்ஸ் கூட்டமைப்பு 24ஆம் நாள் வெளியிட்ட ஓர் அறிக்கையின் படி, 2025ஆம் ஆண்டு, சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட தொழில் துறை ரோபோட்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 54 ஆயிரத்தை எட்டி, உலகின் மொத்த அளவில் 59 விழுக்காடு வகித்தது. இது, வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மேலும், உலகின் மிகப் பெரிய தொழில் துறை ரோபோ சந்தை தகுநிலையை சீனா பராமரித்துள்ளது.

சீனாவின் தொழில் துறை ரோபோ சந்தையில் இன்னும் பெரியளவிலான வளர்ச்சி வாய்ப்புக்கள் உள்ளன. தற்போது முதல் 2029ஆம் ஆண்டு வரை, ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 10 விழுக்காட்டு அதிகரிப்பு விகிதத்தை இச்சந்தை நிலைநிறுத்தும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author