சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 24ஆம் நாள், சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் துவக்கம் எனும் சிறப்பு செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இதில், சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கலந்து கொண்டு பேசுகையில், 14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது, சீனாவின் பண்பாடு மற்றும் சுற்றுலா வளர்ச்சி மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது என்றார்.
2025ஆம் ஆண்டில், சீனத் தேசியளவில் பண்பாட்டுத் துறையின் வருமானத் தொகை 20 இலட்சத்து 80 ஆயிரம் கோடி யுவானாகும். இக்காலக்கட்டத்தில், இத்துறையில் ஆண்டு சராசரியான வளர்ச்சி விகிதம் 8.4 விழுக்காடாகும். உள்நாட்டில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை 652 கோடியை எட்டி, மொத்த சுற்றுலா பயணச் செலவு 6 இலட்சத்து 30 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டி, வரலாற்றில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியது. சீனத் தேசியளவில் 6 இலட்சத்து 40 ஆயிரம் வணிகக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சிகளின் மொத்த வசூல் வருமானம் 6 ஆயிரத்து 160 கோடி யுவானாகும். இது, 2024ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6 விழுக்காட்டு அதிகமாகும்.
