உலக அங்கீகாரம் பெற்ற சர்வதேச புக்கர் பரிசை வென்றிருக்கிறார் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக்.
இதன் மூலம், புக்கர் விருதை வென்ற முதல் கன்னட எழுத்தாளராகும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
எழுத்துலகில் இது ஒரு வரலாற்று சாதனையாகப் போற்றப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹாசனை சேர்ந்த பானு முஷ்டாக், நீண்ட ஆண்டுகளாக கதைகள், நாவல்கள், மற்றும் சமூக பிரச்சனைகளை பிரதிபலிக்கும் இலக்கியங்களை எழுதி வருகின்றார்.
‘ஹசீனா அண்ட் அதர் ஸ்டோரிஸ்’ என்ற கதைகளை அடிப்படையாக கொண்டு உருவான அவரது நாவல், ஆங்கிலத்தில் ‘Heartlamp’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. இதை பத்திரிகையாளர் தீபா பாஸ்தி மொழிபெயர்த்தார்.
புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்
