ஆசிய கோப்பை 2025 முடிவடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஏற்பாடு செய்யும் மற்றொரு போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதவுள்ளன.
இந்த முறை, போட்டி ஏசிசி ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 (Asia Cup Rising Stars) ஆகும். இது இதற்கு முன் நடைபெற்ற எமர்ஜிங் டீம்ஸ் ஆசியக் கோப்பை போட்டியின் மறுபெயராகும்.
இந்தப் போட்டி நவம்பர் 14 முதல் 23 வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து டெஸ்ட் விளையாடும் நாடுகளின் ஏ அணிகள் பங்கேற்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் தங்கள் முழுத் தேசிய அணிகளைக் களமிறக்கும்.
நவம்பர் 16இல் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான் பலப்பரீட்சை
