பிரதமராக பதவியேற்ற நிலையில், இன்று தனது அலுவலகத்திற்கு சென்ற மோடி, முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
பிரதமராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார்.
பிரதான் மந்திரி கிசான் நிதியின் 17-வது தவணையை விடுவிப்பதற்கான கோப்பில் மோடி கையெழுத்திட்டார்.
நாடு முழுவதும் உள்ள சுமார் 9.3 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் 20 ஆயிரம் கோடி வழங்குவதற்காக மோடி கையெழுத்திட்டார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, புதிய அரசின் முதல் முடிவு விவசாயிகளின் நலனுக்கான அரசின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. விவசாயிகளின் வாழ்வுக்காக எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது” என்றார்.