நாடு தழுவிய அளவில் இன்று முதல் நடைபெறவிருந்த 3 நாள் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதால், அனைத்து வங்கிகளும் இன்று வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை, அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான UFBU-க்கும் இடையே நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.
அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிப்பது தொடர்பாக உயர்நிலைக் குழு அமைக்கவும், பிற கோரிக்கைகள் குறித்து விரைந்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 3 நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் இன்று வங்கி சேவைகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
