பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் அல்லது இடமாற்றம் செய்யப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மறுஆய்வு செய்து புதிய பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்த புதிய சட்டவரைவு தயாராகி வருவதாகவும், டாஸ்மாக் கடைகளைத் தனியாருக்கு திறந்துவிடும் யோசனை தற்போதைக்கு அரசிடம் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
டாஸ்மாக் துறையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு, “டாஸ்மாக் துறையே ஒரு வெள்ளை அறிக்கைதான், அதில் அனைத்தும் வெளிப்படையாக உள்ளது” என பதிலளித்தார்.
