சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல், சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கை கருவியாகப் பயன்படுத்தி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாகக் கூறினார்.
“இத்தகைய இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை” என்று அவர் மேலும் கூறி, SCO உறுப்பு நாடுகள் இதுபோன்ற செயல்களைக் கண்டிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
SCO கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
