திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரகசியமாக நடந்த அறங்காவலர் குழு தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பாஜக எச்சரித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறங்காவலர் குழு தலைவர் தேர்வு சில தினங்களுக்கு முன்பு ரகசியமாக நடந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள வீடியோவில், திமுக மற்றும் தவெக இடையேயான தொடர்பு வெளியில் தெரியக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
அறங்காவலர் குழு நியமனத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
