73 ரன்கள்… 103 ரன்கள்! WI-க்கு எதிராக ரோஹித் படைக்கவுள்ள சாதனைகள் என்ன?

Estimated read time 1 min read

அசாம் : இந்திய கிரிக்கெட் அணியின் “ஹிட்மேன்” என்று அழைக்கப்படும் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, நாளை புதன்கிழமை (செப்டம்பர் 30, 2026) குவஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரண்டு பிரம்மாண்டமான உலக சாதனைகளைப் படைக்க ஒரு பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 எனத் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அந்தப் போட்டியில் 35 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த ரோஹித் சர்மா, நாளை நடக்கவிருக்கும் போட்டியில் தனது அசாத்திய பேட்டிங் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைக்கத் தயாராகி வருகிறார்.

ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 12,000 ரன்கள் என்ற இமாலய மைல்கல்லை எட்ட இன்னும் வெறும் 73 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது. இதுவரை 289 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 11,927 ரன்களைக் குவித்துள்ளார். நாளை நடக்கும் போட்டியில் அவர் இந்த 73 ரன்களை எடுக்கும் பட்சத்தில், உலக அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 12,000 ரன்களைக் கடந்த 7-வது வீரர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் (18,426), விராட் கோலி (15,080) ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்தச் சாதனையைச் செய்யும் 3-வது இந்திய வீரர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுவார்.

இதனுடன் சேர்த்து, ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக (Opener) களம் இறங்கி 10,000 ரன்கள் என்ற சாதனையைப் படைக்க அவருக்கு இன்னும் 103 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இதுவரை ஓப்பனராக 200 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 9,897 ரன்களை வாரிக்குவித்துள்ளார். நாளை அவர் சதம் அடித்து இந்த 103 ரன்களைக் கடந்துவிட்டால், சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் ஓப்பனராக 10,000 ரன்களுக்கு மேல் குவித்த உலகின் 4-வது மாபெரும் லெஜெண்ட் என்ற உலகச் சாதனையைப் படைப்பார். இவருக்கு முன்னதாக கிறிஸ் கெய்ல் (10,179), சனத் ஜெயசூர்யா (12,740) மற்றும் சச்சின் டெண்டுல்கர் (15,310) ஆகியோர் மட்டுமே இந்த அரிய சாதனையைச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா, நாளை குவஹாத்தி மைதானத்தில் இந்த இரண்டு மெகா சாதனைகளையும் ஒரே போட்டியில் அடித்துத் தூக்குவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் வெறித்தனமாகக் காத்துக் கிடக்கிறார்கள்.

You May Also Like

More From Author