ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பைக்கு கனடா தகுதி  

Estimated read time 0 min read

கனடாவின் கிங் சிட்டியில் நடந்த அமெரிக்க தகுதிச் சுற்றில் பஹாமாஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் கனடா ஆடவர் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026க்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளுடன் கனடா தோல்வியே இல்லாமல் தகுதிச் சுற்றை நிறைவு செய்து, இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக இடத்தை உறுதி செய்துள்ளது.
முன்னதாக, பஹாமாஸிற்கு எதிராக முதலில் பந்து வீசத் தேர்வுசெய்த கனடாவின் பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பஹாமாஸை 19.5 ஓவர்களில் வெறும் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர். கலீம் சனா மற்றும் சிவம் சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

You May Also Like

More From Author