சீனாவின் மீன் மூலவளம் மற்றும் நீர் வாழ் சூழலியல் நிதானம்

2025 சீனாவின் மீன்பிடித் தொழில் உயிரினச் சுற்றுச் சூழல் நிலைமை பற்றிய கூட்டு அறிக்கையை சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகமும், உயிரினச் சுற்றுச் சூழல் அமைச்சகமும் அண்மையில் வெளியிட்டன. இதன்படி, 2025ஆம் ஆண்டில், சீனாவின் மீன்பிடித் தொழில் மூலவளம் மற்றும் நீர் வாழ் சூழலியல் நிலைமை நிதானமாக உள்ளது.

சீனாவின் 4 முக்கிய கடல் பகுதிகள், யாஞ்சி ஆறு, மஞ்சள் ஆறு உள்ளிட்ட முக்கிய ஆற்றுப்பள்ளதாக்குகள் ஆகியவற்றின் மீன்வள நிலைமை இதில் சேர்க்கப்படுவது முதல்முறை. 14ஆவது ஐந்தாண்டு காலக்கட்டத்தில் மீன் வள நீர்வாழ் சூழலியல் நிலைமை மற்றும் மாற்றங்கள் குறித்து இதில் கள ஆய்வு செய்யப்பட்டன. 2025ஆம் ஆண்டில், சீனாவின் போ ஹைய் கடல், மஞ்சள் கடல், கிழக்கு சீன கடல் மற்றும் தென் சீன கடலின் வட பகுதி ஆகியவற்றில் முறையே 93, 202, 283, 496 வகை மீன்வள உயிரினங்கள் கண்காணிக்கப்பட்டன. மேலும், யாஞ்சி ஆற்றில் கண்காணிக்கப்பட்ட உள்ளூர் பிரதேச மீன் வகைகளின் எண்ணிக்கை 351 ஆகும். தவிரவும், மஞ்சள் ஆற்றிலில் இந்த எண்ணிக்கை 114 ஆகும்.

You May Also Like

More From Author