சிச்சுவான் பல்கலைக்கழகத்திற்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்

சிச்சுவான் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 130ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும்ப் பதில் கடிதம் அனுப்பி, வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

புதிய துவக்க புள்ளியில், நீங்கள் பல்துறைகளின் மேம்பாடுகளை ஆழமாகப் பயன்படுத்தி, புதிய யுகக் காலக்கட்டத்தில் நாட்டின் நெடுநோக்குத் திட்டத்திற்கு சேவை புரிவதில் முன்னோடி மற்றும் முன்மாதிரியாக பங்காற்ற வேண்டும் என ஷிச்சின்பிங் இக்கடிதத்தில் வலியுறுத்தினார். மேலும், கல்வி, அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் மனித வளம் ஆகிய துறைகளில் சீனாவை முன்னணி நாடாக உருவாக்குவதற்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author