சீன தானிய நிறுவனங்களின் ஆண்டு மொத்த உற்பத்தி மதிப்பு 4 இலட்சம் கோடி யுவானாக அதிகரிப்பு

Estimated read time 1 min read

சீனாவில் இதுவரை 24 ஆயிரம் தானிய நிறுவனங்கள் உள்ளன. ஆண்டுக்கு அவற்றின் மொத்த உற்பத்தி மதிப்பு 4 இலட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது என் சீனாவின் ஹுநான் மாநிலத்தின் சாங்ஷா நகரில் 5ஆம் நாள் நடைபெற்ற 8ஆவது சீன தானிய வர்த்தக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தானிய ஆண்டு விளைச்சல் 65 கோடி டன்னுக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025ஆம் ஆண்டு தொடர்ந்து 2 ஆண்டுகளாக 70 கோடி டன்னைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2025ஆம் ஆண்டு நபர்வாரி தானிய இருப்பு 508.9 கிலோகிராமாகும். உலக சராசரி நிலையை இது தாண்டியுள்ளது.

5ஆம் நாள் முதல் 7ஆம் நாள் வரை நடைபெறும் இம்மாநாட்டில், சீனாவின் தரமிக்க சிறப்புத் தன்மை வாய்ந்த தானியம் மற்றும் எண்ணெய் உற்பத்திப் பொருட்கள், நுண்மதித் தானிய இயந்திரங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

படம்:VCG

You May Also Like

More From Author