அமெரிக்காவின் குறிப்பிட்ட மசோதாவுக்கு சீனா எச்சரிக்கை

வன்பொருள் மீதான தொழில்நுட்ப கட்டுப்பாடு பற்றிய பலதரப்பு இசைவு மசோதா உள்பட சில மசோதாக்களை அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவையின் வெளிநாட்டு விவகாரக் கமிட்டி அண்மையில் ஏற்றுக் கொண்டது. இது குறித்த கேள்விக்கு சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஏப்ரல் 25ஆம் நாள் பதிலளிக்கையில், இது தொடர்பான சட்டமியற்ற செயல்முறையை சீனா உற்று கவனித்து, சீன நலன்கள் மீதான தாக்கத்தை கவனமாக மதிப்பீடு செய்வதோடு, சீன நிறுவனங்களின் நியாயமான நலன்களைப் பேணிக்காக்கும் வகையில் அவசிய நடவடிக்கையை உறுதியுடன் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பின் கருத்தாக்கத்தை அளவுக்கு மீறி விரிவுபடுத்தி, ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சுயவிருப்பப்படி பயன்படுத்தும் செயலை சீனா எப்போதும் எதிர்க்கிறது என்றும், குறிப்பிட்ட மசோதா சட்டமாக்கப்பட்டால், அது சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கைக் கடுமையாகப் பாதித்து, உலகளாவிய அரை மின் கடத்தி தொழில் மற்றும் விநியோக சங்கிலிகளின் நிலைத்தன்மையைக் கணிசமாகச் சீர்குலைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author