உலக சாம்பியன் பட்டம் வென்றும் பலனில்லையா…? அரசு அறிவித்த ரூ.40 ஆயிரம் இன்னும் கிடைக்கவில்லை…! கண்ணீர் மல்கப் பேசிய வீராங்கனை…!!! 

Estimated read time 1 min read

கோ-கோ உலகக் கோப்பை 2025-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பெற்றவர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த நாஜியா பீபி. 23 வயதான அவருக்கு, மாநில அரசு அறிவித்த ரூ.40 ஆயிரம் பரிசுத்தொகை ஓராண்டுக்கு மேலாகியும் கிடைக்கவில்லை. இதனால், உலகக் கோப்பை வெற்றியின் மகிழ்ச்சி மங்கிவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

தங்கள் அணி உலகக் கோப்பையை வென்று ஓராண்டுக்கு மேலாகிவிட்டபோதும், தனக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையில் ஒரு ரூபாய்கூட வங்கிக் கணக்கில் வரவில்லை என்று நாஜியா கூறியுள்ளார். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தனது அணித் தோழிகளுக்கு லட்சக்கணக்கிலும், சிலருக்கு கோடிக்கணக்கிலும் பரிசுத்தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஜம்மு-காஷ்மீர் அரசு தனக்கு ரூ.40 ஆயிரம் மட்டுமே அறிவித்ததாகக் கூறியுள்ளார்.

இந்தத் தொகை கிடைக்காதது குறித்து வேதனை தெரிவித்த நாஜியா, உலகக் கோப்பையை வென்ற வீராங்கனைக்கு அரசு இவ்வாறு நடந்துகொள்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பரிசுத்தொகை கிடைக்காதது அவமானமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வீராங்கனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான ஆதரவு வழங்கப்படுவதற்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

விளையாட்டில் தொடர்ந்து முன்னேறுவதற்கு நல்ல உணவு, விளையாட்டுக் காலணிகள், தரமான பயிற்சி வசதிகள் ஆகியவை அவசியம் என்றும் நாஜியா குறிப்பிட்டுள்ளார். தற்போது அவரது செலவுகளைத் தந்தை கவனித்து வருகிறார். ஜம்முவில் முதுகலைப் படிப்பைத் தொடரவும் அவர் விரும்புகிறார். இதற்குத் தேவையான நிதி கிடைக்காத நிலையில், கல்வியையும் விளையாட்டையும் தொடர உதவி தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author