சுவாரசிய கட்டத்தை எட்டிய – 2026 ஐ.பி.எல்

கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த வேளையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதனை தொடர்ந்து இன்று முதல் பிளே ஆப் சுற்று போட்டிகள் துவங்கி நடைபெற இருக்கின்றன. இந்த நான்கு அணிகளில் எந்த அணி கோப்பையை கைப்பற்றினாலும் அது ஒரு சிறப்பு வரலாற்று சாதனையாக மாறவுள்ளது.

யார் ஜெயிச்சாலும் சாதனை உறுதி :

இன்றைய முதலாவது குவாலிபயர் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

அதேவேளையில் அடுத்ததாக எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் ஒன்று போட்டியில் தோல்வியடையும் அணியுடன் குவாலிபயர் 2 போட்டியில் மோதும். எலுமினேட்டர் போட்டியில் தோல்வியடையும் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறும்.

இதன் காரணமாக இந்த பிளே ஆப் சுற்று போட்டிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த ஐ.பி.எல் கோப்பையை வெற்றி பெறும் இந்த நான்கு அணிகளில் எந்த அணியாக இருந்தாலும் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்கிற வாய்ப்பு உருவாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் கோப்பையை கைப்பற்றியிருந்தது.

அதேபோன்று ஹைதராபாத் அணி 2016 ஆம் ஆண்டிலும், குஜராத் டைட்டன்ஸ் அணி 2022 ஆம் ஆண்டிலும், பெங்களூரு அணி 2025 ஆம் ஆண்டும் ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. எனவே இந்த நான்கு அணிகளில் எந்த அணி இந்த 2026 ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றாலும் அது அவர்களுக்கு இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வழங்கப்போகும் வரலாற்று நிகழ்வாக மாறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author