ஆஸ்திரிய-சீன நட்புறவுச் சங்கத்தின் உயர்நிலைக் குழுவுடன் ஜாவ் லெஜி சந்திப்பு

சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் ஜாவ் லெஜி, ஆஸ்திரிய கூட்டாட்சி நாடாளுமன்ற தலைவர் ஸ்டாட் தலைமையிலான ஆஸ்திரிய-சீன நட்புறவு சங்கத்தின் உயர்நிலை குழுவுடன் மார்ச் 31ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், இவ்வாண்டு சீனா-ஆஸ்திரியா இடையேயான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 55ஆவது ஆண்டு நிறைவாகும் என்றார். இருநாட்டு தலைவர்களின் முக்கிய ஒருமித்த கருத்தை செயல்படுத்தவும், பசுமை மாற்றம், டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய சிறப்புகளை உருவாக்கவும், சீன-ஆஸ்திரிய நட்பார்ந்த உத்திநோக்கு கூட்டாளியுறவின் ஆழ்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சீனா ஆஸ்திரியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவுடனான உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதோடு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், கலாச்சாரம், சட்டமியற்றல் உள்ளிட்ட துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தவும் ஆஸ்திரியா சீனாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது என்று ஸ்டாட் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author