“30 நாள் பிளான் ரீசார்ஜ் பண்றது இனி செம ஈஸி!”… டெலிகாம் நிறுவனங்களுக்கு TRAI போட்ட அதிரடி உத்தரவு.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு..!!! 

Estimated read time 1 min read

மொபைல் போன் பயனர்களுக்கு வெளிப்படையான மற்றும் எளிமையான ரீசார்ஜ் அனுபவத்தை வழங்கு மிக முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. வழக்கமாகப் பல டெலிகாம் நிறுவனங்கள் தங்களுக்கேற்ற திட்டங்களை மட்டுமே முகப்புப் பக்கத்தில் முன்னிலைப்படுத்தும் நிலையில், இனி பயனர்கள் எளிதில் தெரிவு செய்யும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, 30 நாள் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் வாய்ஸ் , எஸ்எம்எஸ் சேவைகளைக் கொண்ட திட்டங்களை வாடிக்கையாளர்கள் உடனடியாகப் பார்க்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கென பிரத்யேகமாக ‘TRAI Mandated Packs’ என்ற பெயரின் கீழ் இந்தத் திட்டங்கள் அனைத்தும் ரீசார்ஜ் செயலிகள் மற்றும் தளங்களின் முதல் வரிசையில் காட்சியளிக்க வேண்டும் என்று டெலிகாம் நிறுவனங்களுக்குக் கண்டிப்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பயனர்களுக்குக் கூடுதல் மற்றும் தெளிவான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தோடு இந்த புதிய நடைமுறையைச் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 1 ஆம் தேதியன்று ட்ராய் தனது அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்த நடவடிக்கையானது பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான குறைந்த விலை அல்லது நீண்ட காலத் திட்டங்களை எந்தவித மறைமுகத் தந்திரங்களும் இன்றித் தேர்ந்தெடுக்கப் பெரிதும் உதவும்.

ட்ராய் அமைப்பின் இந்த அதிரடி மாற்றத்தால், மொபைல் ரீசார்ஜ் செய்யும் லட்சக்கணக்கான சாதாரண நுகர்வோர்கள் மிகப்பெரிய அளவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பலரும் தேடிப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அத்தியாவசியத் திட்டங்கள் இனி மிக எளிதாகக் கண்முன்னே கிடைக்கும் என்பதால், நுகர்வோர் மத்தியில் இந்த அறிவிப்புக்குச் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த புதிய விதிகளுக்கு உடனிடியாக ஒப்புதல் அளித்துத் தங்களது செயலிகளில் மாற்றங்களைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author