மியன்மார் வடக்கில் நிகழ்ந்த தொலை தொடர்பு மோசடிக்கான முடிவு குறித்து, சீனப் பொது பாதுகாப்பு அமைச்சகமும் சீன ஊடகக் குழுமமும், கூட்டாகத் தயாரித்த ஆவணத்திரைப்படத்தின் முதல் பகுதி, அக்டோபர் 5ம் நாளிரவு ஒளிப்பரப்பப்பட்டது. இத்திரைப்படம் மூலம் மியன்மார் வடக்கில் திரைமறைவில் நிகழ்ந்த தொலை தொடர்பு மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றவாளிகளின் அகந்தையும், மோசடி இடங்களில் நடந்த உண்மை நிகழ்வுகளும் இத்திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளன. 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்த ஆவணத்திரைப்படம், அக்டோபர் 5ம் முதல் 7ம் நாள் வரை ஒளிப்பரப்பப்படுகின்றன.
