சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏபெக்கின் 33ஆவது தலைவர்கள் கூட்டத்தில் வழங்கிய முக்கிய உரை, சர்வதேச சமூகத்தில் உற்சாகமான பல்வேறு வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக தலைவர் ஷிச்சின்பிங்கின் வழிக்காட்டலுடன், பல்வேறு பொருளாதாரங்களின் தலைவர்கள் ஆசிய-பசிபிக் பொது சமூகத்தின் நெறியைக் கூட்டாக வரைந்து, “ஆசிய-பசிபிக்கில் அற்புதமான” புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கான திசையை வழங்குகிறது என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
2020ஆம் ஆண்டு ஏபெக் அமைப்பு புத்ராஜெயா முன்னோக்கை வகுத்து, 2040ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் பொது சமூகத்தை உருவாக்கும் இலக்கை முன்வைத்துள்ளது. ஆசிய-பசிபிக் பொருளாதாரங்களின் பல்வகைமையால், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, ஆசிய-பசிபிக் பொது சமூகக் கட்டுமானத்தை உருவாக்குவதை முன்னேற்றும் முக்கிய பணியாகும். இம்முறை கூட்டத்தில் எட்டப்பட்ட “ஷென்சென் முன்னோக்கு” பல்வேறு தரப்புகள் கருத்து வேற்றுமையைச் சமாளித்து, ஆசிய-பசிபிக் பொது சமூகம் பயனுள்ள புதிய கட்டத்தில் நுழைவதைக் கூட்டாக முன்னேற்ற விரும்புவதை எடுத்துக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
