தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெறுகின்ற 32ஆவது ஏபெக் உச்சி மாநாட்டின் இரண்டாவது கட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பங்கெடுத்து, தொடரவல்ல இனிமையான எதிர்காலத்தைக் கூட்டாக கட்டியமைப்பது குறித்து உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
புதிய சுற்று அறிவியல் தொழில் நுட்ப புராட்சியும் தொழில் மாற்றமும் ஆழமாக வளர்ந்து வருகின்றன. இவை மனித குலத்திற்குப் புதிய வாய்ப்புகளை வினியோகித்தன. அதேவேளையில், மந்தமான உலக பொருளாதார வளர்ச்சி, கால நிலை மாற்றம், தானியம், எரியாற்றல் ஆகிய துறைகளின் அறைகூவல்கள் தீவிரமாகியுள்ளன. ஆசிய-பசிபிக் நாடுகள், ஒத்துழைப்பை வலுப்படுத்தி, புதிய வாய்ப்புகளைக் கைபிடித்து, புதிய அறைகூவல்களைச் சமாளித்து, தொடரவல்ல இனிமையான எதிர்காலத்தைக் கூட்டாக கட்டியமைக்க வேண்டும் என்றார்.
முதலில் எண்ணியல் மற்றும் நுண்ணறிவின் பங்குகளை வலுப்படுத்தி, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் புதுப்பிப்பு வளர்ச்சியை நனவாக்க வேண்டும். இரண்டாவது, பசுமை மற்றும் கரி குறைந்த வளர்ச்சியில் ஊன்றி நின்று, ஆசிய-பசிபிக் தொடரவல்ல வளர்ச்சியின் புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும். மூன்றாவது, கூட்டாக பயனடைந்து, சகிப்புதன்மை வாய்ந்த ஆசிய-பசிபிக் வளர்ச்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஷி ச்சின்பிங் ஆலோசித்தார்.
2025 ஏபெக் தலைவர்களின் கியோங்ஜு அறிக்கை, ஏபெக் செயற்கை நுண்ணறிவு முன்மொழிவு, மனிதர் சமூக அமைப்பு முறையின் மாற்றத்தைச் சமாளிப்பதற்கான ஏபெக் அமைப்பின் ஒத்துவைப்பு ஆவணம் ஆகியவை இவ்வுச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டன.
