3ஆவது ஆர்க்கிட் விருதுகள் வழங்கும் விழா

3ஆவது ஆர்க்கிட் விருதுகள் வழங்கும் விழா 20ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சருமான லீஷுலெய் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலக நாகரிக முன்மொழிவைச் செயல்படுத்தி மனிதகுலத்தின் பொது நலன்களைப் பரப்பி, சீன-வெளிநாட்டு நாகரிகப் பரிமாற்றத்தை முன்னேற்றுவதில் சிறந்த பங்காற்றும் சர்வதேச நண்பர்களுக்கும் அமைப்புகளுக்கும பாராட்டு தெரிவிப்பது, ஆர்க்கிட் விருதுகளின் நோக்கமாகும். சிங்கப்பூரைச் சேர்ந்த கிஷோர் மஹ்புபானி, அமெரிக்காவைச் சேர்ந்த ஆடம் ஃபாஸ்டர் உள்ளிட்ட 10 சர்வதேச நண்பர்கள் இம்முறை ஆர்க்கிட் விருதுகளைப் பெற்றுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author