‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்.15-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படம் திரைக்கு வருவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரத்யேக தொலைக்காட்சி நேர்காணல் வரும் அக்.11-ம் தேதி மாலை 6:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘2.0’ திரைப்படத்தின்போது அவர் நேர்காணல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 8 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அளிக்கும் இந்த சிறப்பு பேட்டி ரஜினி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜெயிலர் 2’ திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்,இசைவெளியீட்டு விழா நடக்காததால், ரசிகர்களை குஷிப்படுத்த தயாரிப்பு நிறுவனம் அதிரடியான ஒரு பிளானை போட்டுள்ளது. அதாவது, ‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரொமோஷனுக்காகத் தன்னுடைய வழக்கமான பாணியை மாற்றி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் தொலைக்காட்சியில் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான எந்திரன் 2 திரைப்படத்திற்கு பிறகு, அதாவது 8 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் தொலைக்காட்சிக்கு அளிக்கும் பிரத்யேகப் பேட்டி இதுவாகும். இந்த சுவாரசியமான நேர்காணல் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 11-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன பேச போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
