சீன அரசு ஜூலை 15ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 69 லட்சத்து 57 ஆயிரத்து 40 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.7 விழுக்காடு அதிகரித்து, உலகளாவிய முக்கிய நாடுகளில் முன்னணியில் உள்ளது.
இவ்வாண்டு, சர்வதேச நிலைமை குழப்பமாகவும் சிக்கலாகவும் உள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியும் மெதுவாக உள்ளது. இப்பின்னணியில் சீனா உயர்தர வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றி, மேலும் ஆக்கப்பூர்வமான ஒட்டுமொத்த கொள்கையைச் செயல்படுத்தி, வெளிப்புற சவால்களைப் பயனுள்ள முறையில் சமாளித்துள்ளது.
தற்போது, சீனாவின் பொருளாதார அளவு 140 டிரில்லியன் யுவானைத் தாண்டியுள்ளது. இந்த அடிப்படையில் 4.7 விழுக்காடு வளர்ச்சியை அடைவது மிகவும் பாராட்டத்தக்கது.
சீனப் பொருளாதாரம் நிதானமாக வளர்ச்சியடைந்துள்ளதோடு, அதன் புதிய இயக்காற்றல் விரைவாக வளர்க்கப்பட்டு வருகின்றது. கென்யா உள்ளிட்ட பல நாடுகளின் ஊடகங்கள் தெரிவிக்கையில், சீனாவின் புத்தாக்க நலன்கள் கொண்டு வருவது, தாக்கங்கள் அல்ல, மாறாக வாய்ப்புகளாகும் எனக் குறிப்பிட்டுள்ளன. மேலும், புதிய மற்றும் சிறந்த திசையில் செல்கின்ற சீனப் பொருளாதாரம், மந்தமான வளர்ச்சியில் சிக்கியுள்ள உலகப் பொருளாதாரத்துக்கு புதிய இயக்காற்றலை ஊட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளன.
சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் நடைமுறையாக்கத்துடன், பொருளாதாரத்தின் உள் வளர்ச்சி ஆற்றல் மேலும் வெளிப்படுத்தப்படும். மென்மேலும் அதிகமான நாடுகளின் தலைமைச் செயல் அதிகாரிகள், சீனாவை முதலீட்டு இலக்கு இடமாக எண்ணிச் செயல்பட்டு வருகின்றனர்.
