ஜுலை திங்கள் சீன கொள்வனவு மேலாளர் குறியீட்டு எண் 49.4

ஜுலை மாதத்திலான சீன கொள்வனவு மேலாளர் குறியீட்டு எண்ணை சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனமும், சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகமும் 31ஆம் நாள் வெளியிட்டது.

ஜுலை திங்களில் சீனத் தயாரிப்பு தொழிலின் கொளவனவு மேலாளர் குறியீட்டு எண் 49.4விழுக்காடை எட்டியது. கடந்த மாதத்தை விட இது 0.1 புள்ளி குறைந்தது. அதன் செயல்பாட்டு நிலைமை அடிப்படையில் நிலையாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனத்தின் துணைத் தலைவர் சய் ஜின் கூறுகையில், பொதுவாக ஜுலை மாதத்தில் தீவிரமான வானிலை காரணமாக சிறியளவு பாதிப்பு ஏற்பட்ட போதிலும், ஒட்டுமொத்த பொருளாதார செயல்பாடு மீட்சி போக்கு வெளிக்காட்டப்பட்டது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author