நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் அடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம், தற்போது தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான கடுமையான கருத்து மோதலால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் ரிலீஸ் தாமதம் மற்றும் நிதி நெருக்கடி குறித்துத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் முன்வைத்த விமர்சனங்களுக்குப் படத்தைத் தயாரித்த டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது.
இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஆதரவாக கருப்பு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை
