2026ஆம் ஆண்டு தேசிய விழா விடுமுறைக் காலத்தில் சீன திரைப்பட வசூல் 110 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாமல் பல திரைப்படங்கள் வெளிநாடுகளில் திரையிடும் திட்டத்தை வெளியிட்டுள்ளன.
மேலும் கடந்த ஏப்ரல் மாதம், சீன திரைப்பட தொழில் நுட்ப நிறுவனம், இந்தியாவின் மிகப் பெரிய திரையரங்க ஒருங்கிணைப்பாளரான UFO Moviezஉடன், தனிச்சிறப்பு கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இந்தியாவில் குறைந்தது 15 CINITY திரையிடல் அமைப்புகளை ஏற்பாடு செய்து, ஹைதராபாதில் CINITY மாஸ்டரிங் மையத்தை நிறுவவுள்ளது.
சி.எம்.சி நிறுவனம் மற்றும் ஓரியண்டல் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் யீங்சுஜுன் கூறுகையில், இதுவரை, சி.எம்.சி திரைப்படங்களின் வெளிநாட்டு வெளியீட்டு இணையம் உலகில் 6 கண்டங்களைச் சேர்ந்த 130க்கும் மேலான நாடுகளின் 1000க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவியுள்ளது என்று கூறினார்.
