இந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி, சென்னை நகரம் தனது 386வது ஆண்டை பெருமையுடன் கொண்டாடுகிறது.
ஆண்டுதோறும் இந்த நாள், நகரத்தின் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை, வரலாற்றை பேசும் ‘Madras Day’ என அனுசரிக்கப்படுகிறது.
சென்னையின் ஆரம்பம் 1639ஆம் ஆண்டு, கிழக்கிந்திய கம்பெனி, அப்போதைய விஜயநகர சாம்ராஜ்யத்தின் தளபதி தாமர்லா சென்னப்ப நாயக்கரிடம் இருந்து நிலம் வாங்கியதுடன் தொடங்கியது.
இதில் ‘சென்னை’ என்ற பெயர் முதல்முறையாக விற்பனை ஒப்பந்தத்தில் பதிவாகியுள்ளதாக வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.
அந்த இடம் பின்னர் ‘சென்னை பட்டினம்’ என அறியப்பட்டது.
சென்னையில் உள்ள பிரபலமான இடங்களின் பெயர் காரணங்கள் அறிந்துகொள்வோமா?!
