கடைசி நிமிடத்தில் நிலவும் எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்க, இந்தியா வெளிச் சந்தையிலிருந்து (Spot Market) இயற்கை எரிவாயுவை அவசரமாகக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி எரிவாயு நிறுவனமான கெயில் (GAIL), திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை உடனடி சந்தையில் இருந்து வாங்க டெண்டர் விடுத்துள்ளது.
வழக்கமாக நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் எரிவாயு வாங்கப்படும் நிலையில், தற்போது நிலவும் தட்டுப்பாட்டைப் போக்க இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் தொடங்குவதால் நாட்டின் மின்சாரத் தேவை கடுமையாக உயர்ந்துள்ளது. நிலக்கரி மூலம் இயங்கும் மின் நிலையங்களுக்குப் பாரம் குறைய, எரிவாயு மூலம் இயங்கும் மின் நிலையங்களை முழு திறனுடன் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இயற்கை எரிவாயு வாங்க மத்திய அரசின் புதிய திட்டம்
