10ஆவது சீன-ரஷிய பொருட்காட்சிக்கான வாழ்த்து

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தினும் மே 17ஆம் நாள் 10ஆவது சீன-ரஷிய பொருட்காட்சிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினர்.

ஷி ச்சின்பிங் செய்தியில் குறிப்பிடுகையில்,

சீன-ரஷிய நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவாகவும், சீன-ரஷிய அண்டை நாட்டு நட்புறவு உடன்படிக்கை கையொப்பமிடப்பட்ட 25ஆவது ஆண்டு நிறைவாகவும் இவ்வாண்டு திகழ்கின்றது. இரு நாடுகளின் பல்வேறு துறைகள், இந்த பொருட்காட்சியை வாய்ப்பாக கொண்டு, சீன-ரஷிய அண்டை நாடுகளான மேம்பாடுகளைப் பயன்படுத்தி, பன்முக நடைமுறை ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டு பொருளாதார சமூக வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை அளித்து, புதிய யுகத்தில் சீன-ரஷிய பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பொருட்காட்சி இருதரப்புகளின் முக்கிய ஒத்துழைப்புத் துறைகளுக்குக் கவனம் செலுத்தியது. இரு நாட்டு ஒத்துழைப்புக்காக திட்டமிட்டு, இரு நாட்டு மக்களுக்கு நலன் தரும் என்று புத்தின் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author