சீனத் தேசிய விழா விடுமுறை காலம் புதன்கிழமையுடன் முடிவடைந்தது. இந்நாளில் சுமார் 2 கோடியே 41 இலட்சத்து 50 ஆயிரம் பேர் ரெயில் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உச்சக்கட்ட போக்குவரத்து நிலைமையைச் சமாளிக்க இந்நாளில் 2449 ரெயில் சேவைகளைக் கூடுதலாக இயங்கப்பட்டதாக சீனத் தேசிய இருப்புப்பாதைக் குழு நிறுவனம் தெரிவித்தது.
பிரபலமான புறப்படும் நகரங்களில், பெய்ஜிங், குவாங்சோ, செங்து, சி ஆன் ஆகியவை முன்னணியில் உள்ளன. பிரபலமான சென்றடையும் நகரங்களில் பெய்ஜிங், குவாங்சோ, ஷாங்காய், செங்து ஆகியவை முன்னணியில் உள்ளன.
