சௌதி அரேபியா-ஈரான் தூதாண்மையுறவு மீட்சி, பாலஸ்தீனத்தின் பல்வேறு தரப்புகளின் நல்லிணக்கம், பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம், ஆப்பிரிக்க லீக் ஜி 20 அமைப்பில் சேர்வதற்கு ஆதரித்தது ஆகியவை, தனிச்சிறப்பு வாய்ந்த சீனாவின் தூதாண்மை முயற்சி, பதற்ற சர்வதேச நிலைமைக்கு நிதானம் மற்றும் ஒத்துழைப்புகளைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகாலத்தில், சி.எம்.ஜியின் சி.ஜி.டி.என் நடத்திய உலகளாவிய கருத்துக் கணிப்புகளின்படி, தனிச்சிறப்பு வாய்ந்த சீனாவின் தூதாண்மை பணி, பல்வேறு நாடுகளின் விசாரணைபடுத்தப்பட்டோர்களால் வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் நியாயமான சர்வதேச ஒழுங்குகளை நிறுவ சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கருத்துக் கணிப்பில், சீனா முன்வைத்துள்ள உலக பொது எதிர்கால சமூகம் எனும் கண்ணோட்டம், மனிதக் குலத்தின் இனிமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு தொடர்ச்சியான உந்து சக்சியைக் கொண்டு வரும் என்று 82.5 விழுக்காட்டு விசாரணைபடுத்தப்பட்டோர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். உலக வளர்ச்சி முன்மொழிவின் முக்கிய கண்ணோட்டத்தை ஏற்றுக்கொண்டு, உலகப் பிரச்சினையைத் தீர்த்து, மனித குலத்தின் இன்பமான வாழ்க்கையை நனவாக்குவதற்கு வளர்ச்சி ஒரு சரியான வழிமுறையாகும் என்று 84.5 விழுக்காட்டு விசாரணைபடுத்தப்பட்டோர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.