1938ஆம் ஆண்டு, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் காலத்தில், இந்திய மருத்துவர் குவார்கநாத் எஸ். கோட்னிஸ், மருத்துவக் குழுவுடன் சீனாவுக்கு வருகை புரிந்து, 1942ஆம் ஆண்டு, 32 வயதில் அவர் நோய் வாய்ப்பட்டு சீனாவில் மரணமடைந்தார்.
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80வது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்வு செப்டம்பர் 3ஆம் நாள் நடைபெறவுள்ளது. குவார்கநாத் எஸ். கோட்னிஸின் குடும்பத்தினர் அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்த போது அவர்கள் கூறுகையில், குவார்கநாத் எஸ். கோட்னிஸின் சர்வதேசவாத எழுச்சி, உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கு பங்காற்ற விரும்புவதாக தெரிவித்தனர்.
