திறந்த ஒத்துழைப்பிலும் தாராள வர்த்தகத்திலும் ஈடுபட வேண்டும்: சீனா

பிரான்ஸும் ஜெர்மனியும் ஐரோப்பிய ஆணையத்திடம் அக்டோபர் 5ஆம் நாள் முன்வைத்த அதிகாரப்பூர்வமற்ற ஆவணத்தில், ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அதேவேளையில், பல புதிய பாதுகாப்புவாதக் கருவிகளை அறிமுகப்படுத்தின.

இது குறித்து 6ஆம் நாள் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும் போது, உலக முக்கிய பொருளாதாரங்களில் பிரான்ஸும் ஜெர்மனியும் இடம்பெறுகின்றன. அவை திறந்த ஒத்துழைப்பிலும் தாராள வர்த்தகத்திலும் ஊன்றி நின்று உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கிணங்கச் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தை அடிக்கடி பாதுகாப்புவாத கருவிகளைப் பயன்படுத்தத் தூண்ட வேண்டாம். மேலும் வர்த்தகப் பிரச்சினைகளை அரசியல்மயமாக்கவும் பாதுகாப்புமயமாக்கவும் கூடாது, தனக்குக் தானே பாதிப்பை ஏற்படுத்தும் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

More From Author