இந்திய ராணுவத்தின் மேஜர் சுவாதி சாந்தகுமார், ஐநா சபையின் பாலின சமத்துவத்திற்கான ‘பெண் அமைதி காப்பாளர்’ விருதை வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
தென் சூடானில் ஐநாவின் அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மேஜர் சுவாதி, “Equal Partners, Lasting Peace” (சமமான பங்காளிகள், நீடித்த அமைதி) என்ற பெயரில் ஒரு முன்னோடித் திட்டத்தை முன்னெடுத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம், போர் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடச் செய்தார்.
சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தத் திட்டம் உலகிற்குப் பறைசாற்றியது.
ஐநாவின் உயரிய விருது வென்ற இந்திய ராணுவ அதிகாரி மேஜர் சுவாதி சாந்தகுமார்
