மாலத்தீவு சுதந்திரம் பெற்ற 61ஆவது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

 

மாலத்தீவு சுதந்திரம் பெற்று 61ஆவது ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 26ஆம் நாள் மாலத்தீவு குடியரசுத் தலைவர் முய்ஸூக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

அதில் ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சீன-மாலத்தீவு நட்புறவு வாழையடி வாழையாகத் தொடர்ந்துள்ளது. இரு நாட்டுத் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட கடந்த 54 ஆண்டுகளில், இரு நாட்டு மக்களுக்கு பயனுள்ள நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது. 2024ஆம் ஆண்டு, அரசுத் தலைவர் முய்ஸூ சீனப் பயணம் மேற்கொண்ட போது, இரு நாட்டுறவை பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை உயர்த்தி சீன-மாலத்தீவு பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாக கட்டியமைக்க நாம் ஒருமனதாக ஒப்புக்கொண்டோம். முய்ஸூ உடன் இணைந்து, இரு நாட்டு பாரம்பரிய நட்பைத் தொடர்ந்து பயனுள்ள ஒத்துழைப்பை ஆழப்படுத்து சீன-மாலத்தீவு பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் வளர்ச்சியை முன்னேற்றி இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைப் படைக்க நான் விரும்புகிறேன் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.  

You May Also Like

More From Author