பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி நடப்பதாக செர்பியாவின் முன்னாள் அதிபர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
பிரதமர் மோடி அரசு பதவியில் தனது 25 ஆண்டை நிறைவு செய்துள்ளார். அவருக்கு செர்பியாவின் முன்னாள் அதிபர் அலெக்சாண்டர் வுசிக்கும் தன்னுடைய வாழ்த்துகளை கூறினார். இந்நிலையில் பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி நடப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்திய மக்களுக்கு மோடி என்ற ஒரு நல்ல தலைவர் இருக்கிறார் என்றும் தற்போது, அவரை வீழ்த்த சர்வதேச சதி நடக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இந்தியாவை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்,
மகாத்மாவின் போதனைகளை அவர் பின்பற்ற முயற்சிக்கிறார் என கூறியுள்ளார்.
பிரதமர் மோடியால் மட்டுமே, உலக அரங்கில் இந்தியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழ்கிறது எனத் தெரிவித்துள்ள அலெக்சாண்டர் வுசி, இருப்பினும், தோல்வியடைந்து விட்டதாகக் கூறி, அவரை வீழ்த்துவதற்கான முயற்சி நடக்கிறது என்றும் கூறியுள்ளார். அலெக்சாண்டர் வுசிக் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
