கிட்டத்தட்ட 90 ஆண்டுகளில் முதல் முறையாக, ஜப்பானிய போர்க்கப்பல்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) நியூசிலாந்தின் வெலிங்டனில் நங்கூரமிட்டன.
இது தெற்கு பசிபிக் பகுதியில் ஜப்பானின் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு அடையாள படியைக் குறிக்கிறது.
இரண்டு ஜப்பானிய போர்க்கப்பல்களான JS Ise மற்றும் JS Suzunami, 500 க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஏற்றி, நியூசிலாந்து கடற்படைக் கப்பலான HMNZS Canterbury உடன் தங்கள் இந்தோ-பசிபிக் வரிசைப்படுத்தலின் ஒரு பகுதியாக வந்தன.
இந்த கப்பல்கள் சிட்னியில் இருந்து புறப்பட்டன, அங்கு ஜப்பானியப் படைகள் சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிற பிராந்திய நட்பு நாடுகளுடன் கூட்டு ராணுவப் பயிற்சியை மேகொண்டது குறிப்பிடத்தக்கது.
90 ஆண்டுகளில் முதல்முறையாக நியூஸிலாந்திற்கு சென்ற ஜப்பான் போர்க்கப்பல்
