காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் காலமானார்..!!

Estimated read time 1 min read

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர் கோவாவின் டோனா பவுலாவில் உள்ள அவரது வீட்டில் இன்று மயக்கம் அடைந்ததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் 45 நிமிடம் தொடர்ச்சியாக சிபிஆர் அளித்தும், மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வரமுடியவில்லை; பிறகு சிகிச்சை பலன் அளிக்காமல் நானா படேகர் உயிரிழந்தார்.

திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்களை கொண்ட இவர், முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். நானா படேகர் தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘பொம்மலாட்டம்’ மற்றும் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான காலா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

1978ஆம் ஆண்டு ‘கமன்’ திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். ‘சலாம் பாம்பே’ மற்றும் ‘பரிந்தா’ ஆகிய படங்கள் நானா படேகருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. குறிப்பாக, ‘பரிந்தா’ திரைப்படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ‘அங்கார்’, ‘திரங்கா’, ‘கிராந்திவீர்’, ‘அக்னி சாக்ஷி’, ‘காமோஷி: தி மியூசிக்கல்’, ‘யஷ்வந்த்’, ‘அப் தக் சப்பன்’, ‘அபஹரன்’ மற்றும் ‘ராஜ்நீதி’ போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

வில்லன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவந்த இவர், ‘வெல்கம்’ திரைப்படத்தில் தனது நகைச்சுவை பக்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.

நானா படேகரின் சிறந்த நடிப்புத் திறமையை பாராட்டும்விதமாக இதுவரை 3 தேசிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் 2013ஆம் ஆண்டு ‘பத்மஸ்ரீ’ விருதையும் பெற்றார்.

இவருக்கு மனைவி நீலகாந்தி படேகர் உள்ளார். இவர்கள் இருவரும் பிரித்து வாழ்ந்து வந்தனர். மல்ஹர் படேகர் என்ற மகன் உள்ளார். இவர் பாரதிராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம் படத்தில் நடித்துள்ளார் ரஜினியின் காலா படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு உதவுவதற்காக ‘நாம் பவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கி பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்தவர்.

இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You May Also Like

More From Author