15வது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி நிறைவுப் பெற்றது

Estimated read time 0 min read

15வது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி நவம்பர் 21ஆம் நாளிரவு குவாங்தொங் மாநிலத்தின் ஷென்ட்சென் நகரில் நிறைவு பெற்றது.

சீனாவின் குவாங்தொங், ஹாங்காங், மக்கௌ ஆகிய மூன்று இடங்களும் கூட்டாக விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்வது இதுவே முதல் முறை. இதன் மூலம் விளையாட்டுத் துறையில் “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கை புத்தாக்க முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு தேசிய விளையாட்டுப் போட்டி, பசுமை, பகிர்வு, திறப்பு, நேர்மை ஆகியவற்றைக் கொண்ட சிந்தனையிலும், எளிமை, பாதுகாப்பு, சிறப்பு ஆகியவற்றைக் கொண்ட கொள்கையிலும் ஊன்றி நிற்கிறது. விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டுப் பணிகள், இந்த மூன்று இடங்களிலுள்ள மக்கள் உடல் பயிற்சியை முன்னேற்றுவதுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author