கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக திருப்பதி தாரகராமா விளையாட்டு மைதானத்தில் 75 மணிநேர பிரமாண்ட தொடர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 அடி உயர ‘கட் அவுட்’ அமைக்கப்பட்டுள்ளது.
130 வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை பாராயணம் செய்தனர். தொடர்ந்து 2 ஆயிரம் பேர் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் வாழ்க்கை, மக்கள் சேவை, சாதனைகளை விளக்கி பேசி வருகின்றனர். 75 மணிநேர தொடர் நிகழ்ச்சி நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
